பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கிருஷ்ண மாரிமுத்து இயக்கத்தில், நாகசைதன்யா நடித்துள்ள படம் "யுத்தம் சரணம்". இதற்கு முன்பு ரொமான்டிக் காமெடி படங்களாக நடித்து வந்த அவர், முதன்முறையாக இந்த படத்தில் அதிரடி ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த வகையில், ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்க, வில்லனாக தெலுங்கு நாயகன் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். மண்வாசனை ரேவதி அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை தயாரித்துள்ள நாகசைதன்யாவின் தந்தையான நடிகர் நாகார்ஜூனா, படத்தை தொடங்கியபோது செப்டம்பர் 8-ந்தேதி படம் ரிலீஸ் என்று அறிவித்தவர், அதன்படியே வருகிற 8-ந்தேதி யுத்தம் சரணம் படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழு சான்றிதழுக்காக திரையிடப்பட்ட அப்படத்துக்கு நேற்று யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.