தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா. இயக்குநரான இவர் எனக்கு 20 உனக்கு 18, கேடி படங்களை இயக்கினார். அதன்பின்னர் ஊலலலா என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் களமிறங்கினார். ஆனால், அந்தப் படம் தோல்வி அடையவே சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் இப்போது தெலுங்கில் ஆக்சிஜன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் கோபிசந்த், ராசி கண்ணா, அனு இமானுவேல், ஜெகபதி பாபு, ஷாம், சந்திரமோகன், சாயாஜி ஷிண்டே, அபிமன்யூ சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். 30 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்தினமே தயாரிக்கிறார்.
படத்தை வருகிற அக்டோபர் 12-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழிலும் ஆக்சிஜன் என்ற பெயரிலேயே மொழிமாற்றம் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஏ.எம்.ரத்னம், தனது ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன் சார்பில் வெளியிடுகிறார்.