ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரிட்டையர்டு ஹீரோக்கள் குணச்சித்திர நடிகர்களாகவும், வில்லன்களாகவும் பரிமாணம் பெறுகின்ற நிகழ்வில் நடிகர் ஜெகபதிபாபுவும் இணைந்து சில வருடங்களாகி விட்டன. தெலுங்கு மற்றும் தமிழில் வில்லனாக நடிக்க வேண்டுமா கூப்பிடு ஜெகபதிபாபுவை என்கிற அளவுக்கு வில்லனாக பிரபலமானார். அதை தொடர்ந்து மலையாளத்திலும் அழைப்பு வரவே, கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' படத்தில் வில்லனாக நடித்திருந்தவர், வில்லனாக அவர் காட்டிய கம்பீரம் ரசிகர்களுக்கு நிறையவே பிடித்திருந்தது.
அதை தொடர்ந்து தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கும் 'ஆதி' படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெகபதிபாபு. த்ரிஷ்யம், பாபநாசம் புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்தப்படத்தை இயக்குகிறார். மோகன்லாலின் சொந்த தயாரிப்பு என்பதால் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க ஜெகபதிபாபுவை சிபாரிசு செய்ததும் மோகன்லால் தான்.
இந்தப்படம் ஒரு அறிமுக நாயகனுக்கேற்ற வகையில் ரொமான்ஸ் அல்லது காமெடி படமாக அல்லாமல் ரிவென்ஜ் த்ரில்லராக உருவாக இருக்கிறது. ஆக்சன் காட்சிகள் அதிகம் உள்ள இந்தப்படத்திற்காக சில மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளை எடுத்துக்கொண்டுள்ளார் பிரணவ்.. இந்தப்படத்தில் பிரணவின் தந்தையாக முகேஷ் நடிக்கிறார்.