இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இந்த அளவுக்கு தான் மீண்டும் லைம்லட்டுக்குள் வருவோம் என நினைத்தே பார்த்திருக்க மாட்டார் ஓவியா. அவருக்கு கிடைத்துள்ள இந்த புதிய செல்வாக்கால் அவருக்கு சில படங்கள் புக்காகி உள்ளன என்று சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஓவியா நடித்து, ரிலீஸாகாமல் கிடப்பில் கிடந்த ஒன்றிரண்டு படங்களையும் தூசி தட்டி, ஓவியாவின் புகழை வைத்து வியாபாரம் செய்யும் பணிகளும் நடக்கின்றன. அந்த வகையில் இன்னும் ஒரு படி அதிகமாக சென்று, ஓவியா நடித்த மலையாளப்படம் ஒன்றையும் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கின்றனர்..
மலையாளத்தில் மனுஷ்ய மிருகம் என்கிற இந்தப்படத்திற்கு போலீஸ் ராஜ்ஜியம் என பெயர் வைத்துள்ளனர். அதற்கு காரணமும் இருக்கிறது இந்தப்படத்தில் பிருத்விராஜும் மறைந்த நடிகர் கலாபவன் மணியும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் படத்தின் பிரதான அம்சமாக இருந்தாலும் கூட படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளவர் வில்லன் நடிகர் பாபுராஜ். இந்தப்படத்தை இயக்கியதும் அவர் தான். கதாநாயகியாக கிரண் நடித்துள்ளார். ஓவியா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.