ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய்சேதுபதி நடிப்பில் பல வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம் மெல்லிசை. பைனான்ஸ் பிரச்சனை முடங்கி கிடந்த படம், ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு பிறகு தூசு தட்டப்பட்டு புரியாத புதிர் என்று பெயரை மாற்றினர். சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா கமர்ஷியலாக வெற்றியடைந்தது. இதை கருத்தில் கொண்டு புரியாத புதிர் படத்தை வெளியிடும் வேலையில் இறங்கினர். அந்தப் படத்தின் மீது பணப் பஞ்சாயத்து இருந்ததால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக புரியாத புதிர் படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் புரியாத புதிர் படத்துக்கு எதிர்பார்த்த ஓப்பனிங்கும் இல்லை... வசூலும் இல்லை. இதனால் விஜய்சேதுபதி சற்று அப்செட்டாகி உள்ளாராம்.