ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம் கொடிவீரன். இந்த படத்தில் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, பசுபதி, விதார்த், பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். மதுரை கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் காதல், செண்டிமென்ட், வன்மம் கலந்த கதையில் உருவாகி வருகிறது.
மேலும், இந்த படத்திற்கு ஒரு வலுவான வில்லன் வேண்டும் என்று நடிகர் அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் டைரக்டர் முத்தையா. ஆனால், அந்த வில்லன் வேடம் அர்ஜூனுக்கு பிடித்தபோதும், சம்பள பேச்சுவார்த்தை சமூகமாக முடியாததால் கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து விலகினார் அர்ஜூன். அதையடுத்து அர்ஜூன் நடிக்கயிருந்த வேடத்தில் பசுபதி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஏற்கனவே பல படங்களில் வில்லனாக மிரட்டியிருக்கும் பசுபதியின் மிரட்டல் இந்த படத்தில் இன்னும் அதிரடியாக இருக்குமாம்.