‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அஜீத்தின் விவேகம் படத்தைத் தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன், ஆக்கோ, கோ கோ உள்பட பல படங்களுக்கு பிசியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார் அனிருத். இந்த நிலையில், தெலுங்கிலும் திரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நடிக்கும் 25-வது படம் மூலம் அறிமுகமாகிறார் அனிருத்.
மேலும், கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்நிலையில், நேற்று செப்டம்பர் 2-ந்தேதி பவன் கல்யாணின் பிறந்த நாள் என்பதால், அனிருத் இசையமைத்து பாடிய, பாய்ட்டிகோஷி சாஸ்டே -என்ற பாடலின் ஒரு சிறு பகுதியை வெளியிட்டுள்ளனர். அதோடு, இப்படம் 2018 ஜனவரி 10-ந்தேதி சங்கராந்திக்கு வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.