'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால் படம் ஒவ்வொருமுறை ரிலீசாகும்போதும் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது அவரது படங்களின் முதல்நாள் கலெக்சன் எவ்வளவு என்பதுதான். காரணம் முதல்நாள் கலெக்சனில் முதல் இடத்தை நீண்ட நாட்களாக தக்க வைத்திருந்தவர் மோகன்லால் தான். ஆனால் இந்த வருடம் மலையாளத்தில் வெளியான மம்முட்டியின் 'தி கிரேட் பாதர்' படத்தின் முதல் நாள் வசூல் 4.31 கோடி என்கிற எல்லையை தொட்டது இது மோகன்லாலின் 'புலி முருகன்' பட சாதனையை முறியடித்த வசூல் என்பதால், மோகன்லால் ரசிகர்கள் பலருக்கு இதில் வருத்தம் இருந்தது.
அதனால் நேற்று முன் தினம் வெளியான மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். முதன்முதலாக பிரபல இயக்குனர் லால் ஜோஸுடன் மோகன்லால் கூட்டணி சேர்ந்திருக்கிறார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளானது. அதனால் கலெக்சனும் தாறுமாறாக எகிறும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக கேரளா முழுவதும் சேர்த்து முதல் நாளில் 3.௦6 கோடி ரூபாய் தான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் வெளி நாளான வியாழன் அன்று வெளியானதால் வசூல் குறைந்துவிட்டதாக சொல்லப்பட்டாலும், படம் ஆவரேஜ் ஹிட் என்கிற அளவில் இருப்பதால் வசூல் குறைந்துள்ளது எனவும் சொல்லப்படுகிறது.