ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடிகர் திலீப்பிற்கு ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா என்பது சிந்துபாத் கதை போல நீண்டுகொண்டே போகிறது. அவர் நடித்து வந்த படங்கள் பாதியில் நிற்பது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் அவரது 'ராம்லீலா' படம், திலீப் ரிலீசாவது இருக்கட்டும்.. எனக்கு என்றைக்குத்தான் ரிலீஸ் தேதி என எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது. காரணம் நடிகை விவகாரத்தில் கைதாகி சமீபகாலமாக சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் படம் தற்போதைய சூழலில் ரிலீஸானால் அதற்கு மக்களிடம் எந்த விதமான வரவேற்பு இருக்கும் என்கிற கேள்வி பலரிடமும் இருக்கிறது..
இதனாலேயே திலீப் நடிப்பில் தயாராகி கடந்த ஜூன் மாதமே வெளியாக வேண்டிய 'ராம்லீலா' படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. தற்போது திலீப் சம்பந்தப்பட்டிருப்பது பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்ட விவகாரம் என்பதால், மக்கள் மனநிலை அவரது படங்களை எந்த விதத்தில் அணுகும் என்பதை கணிக்க முடியாமல் படத்தின் தயாரிப்பாளரான தோமிச்சன் முலகுப்பாடம் தவித்து வருகிறார்.
கடந்த வருடம் அவரைப்போல சந்தோஷமான தயாரிப்பாளர் வேறு ஒருவரை பார்க்க முடிந்திருக்காது. அந்த அளவுக்கு 'புலி முருகன்' படத்தின் வெற்றியால் சந்தோஷ கடலில் நீந்தியவர் இப்போது ராம்லீலாவை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கிறார். சரி திலீப்பிற்கு ஜாமீன் கிடைத்துவிடும்.. அதன்பின் ரிலீஸ் செய்யலாம் என நினைத்தால், நீதிமன்றம் ஒவ்வொருமுறையும் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து வருகிறது. இதனால் வெறுத்துப்போன தயாரிப்பாளர், படத்தை ரிலீஸ் செய்வோம்.. நடப்பது நடக்கட்டும். தீர்ப்பு மக்கள் கையில் என ரிலீசுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அநேகமாக வரும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் 'ராம் லீலா' ரிலீஸாகும் என தெரிகிறது.
அறிமுகம் இயக்குனர் அருண்கோபி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரயாகா மார்ட்டின் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.