இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வீரம்' படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. அஜித் நடித்த 'ஒட்டன் சத்திரம்' விநாயகம் என்ற கேரக்டரில் ஹிந்தியில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார் என்றும் அப்போது சொல்லப்பட்டது. இந்த தகவலுக்கு மாறாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த தகவலின்படி 'ஒட்டன் சத்திரம்' விநாயகம் கேரக்டரில் சல்மான்கான் நடிக்கவில்லை என்றும், பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும் ஷங்கரின் 2.0 படத்தின் வில்லனுமான அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
'வீரம்' படத்தின் ஹிந்தி ரீ-மேக்கை ஹிந்தியில் 'ஹவுஸ்ஃபுல்-3' என்ற படத்தை இயக்கிய இருவர்களில் ஒருவரான பர்ஹத் இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு லேண்ட் ஆப் லுங்கி ( LAND OF LUNGI (LOL) என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகவிருக்கிறது.
இந்த படம் குறித்த மேலும் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.