தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் பாண்டிராஜின் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் 'செம'. ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அர்தனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். பாண்டிராஜின் 'பசங்க' புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன், ரவிச்சந்திரனின் லிங்க பைரவி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள செம படத்தை செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஆயுத பூஜை விடுமுறையை குறி வைத்துள்ள சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் 'வேலைக்காரன்', ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' ஆகிய படங்களும் செப்டம்பர் 29, ரிலீஸ் ஆக இருப்பதாக தேதி குறித்துள்ளன.
இந்நிலையில் இப்போது பாண்டிராஜின் 'செம' திரைப்படமும் அந்த படங்களுடன் களமிறங்குகிறது. இந்த மூன்று படங்களுடன் செப்டம்பர் 29ஆம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள 'பலூன்' படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.
ஆக, ஆயுத பூஜை விடுமுறையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்த நான்கு படங்கள் வெளியாக உள்ளன.