பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின்றன. அதில் மோகன்லால் நடித்துள்ள வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் மட்டும் நேற்றே வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கியுள்ளார். மோகன்லாலும் லால் ஜோஸும் இணைவது இதுதான் முதன்முறை. அங்கமாலி டைரீஸ் புகழ் ரேஷ்மா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மம்முட்டி நடிப்பில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா' என்கிற படம் இன்று ரிலீஸாகி உள்ளது. பிருத்விராஜை வைத்து 'தி செவன்த் டே' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஷ்யாம்தர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். படத்தில் மம்முட்டி டீச்சர் ட்ரெய்னிங் கல்லூரியின் பேராசிரியராக நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷா சரத் நடிக்க, இன்னொரு கதாநாயகியாக லால் ஜோஸின் 'நீ-நா' படத்தில் அறிமுகமாகிய தீப்தி சதி நடித்திருக்கிறார்.
பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஆடம் ஜான்' படமும் இன்று ரிலீசாகி உள்ளது. இது ஒரு ரிவெஞ்ச் திரில்லர் ஆக உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் நரேனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜினு ஆப்ரஹாம் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இதுதவிர 'பிரேமம்' கூட்டணியில் உருவாகியுள்ள நிவின்பாலி நடித்துள்ள 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' என்கிற படமும் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அல்தாப் சலீம்.. இந்தப்படத்தை தானே தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார் நிவின்பாலி. அதுமட்டுமல்ல, பிரேமம் படத்தில் அறிமுகமான 'ஷராபுதீன், கிருஷ்ண சங்கர், ஷிஜூ வில்சன் ஆகியோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அஹானா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நான்கு படங்களில் ரசிகர்களின் மனதை வெல்லப்போவது யார் என்பது வரும் நாட்களில் தெரியும்.. தவிர இந்த ஓணம் பண்டிகைக்கு வருவதாக இருந்த துல்கர் சல்மானின் 'பறவ' சில நாட்களுக்கு முன்பே இந்த ரேசில் இருந்து விலகிக்கொள்ள,, கட்டாயமாக வருவோம் என சொல்லிவந்த சமுத்திரக்கனி-ஜெயராம் கூட்டணியில் உருவாக்கி இருந்த 'அப்பா' ரீமேக்கான 'ஆகாச மிட்டாய்' படம் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகிவிட்டது.