வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
1980-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சாந்தி கிருஷ்ணா. சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானவர். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பாரதி-வாசு ஜோடி இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் புகழ்பெற்றார். இதில் அவர் சுரேஷ் ஜோடியாக நடித்தார். சின்ன முள் பெரிய முள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் உள்பட பல படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தார்.
சாந்தி கிருஷ்ணா சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார் மலையாள நடிகர் நிவின் பாலி. அவர் தயாரித்து, நடிக்கும் ஜண்டுகளூடே நட்டில் ஓரிடவேளா படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் பிஜு படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். இன்று வெளியாகி உள்ள இப்படம் மிகவும் எதிர்பார்க்கபடும் படம் ஆகும். சாந்தி கிருஷ்ணா சில தமிழ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.