மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார்.
திருமுருகனுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமுருகனுக்கும் அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். வருகிற 4ந் தேதி தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு கிராமத்தில் திருமணம் நடக்கிறது. இயக்குனர் பாரதிராஜா விழாவுக்கு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.