பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
64வது பிலிம் பேர் விருது வழங்கும் விழா கடந்த ஜுன் மாதம் 17ந் தேதி ஐதராபாத்தில் உள்ள எச்ஐசிசி காம்பளக்சில் நடந்தது. இதில் தென்னிந்திய மொழிகளில் 2016ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்கள், படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழில் ஜோக்கர் சிறந்த படமாகவும், இறுதிச்சுற்று சுதா கொங்கரா சிறந்த இயக்குனராகவும், மாதவன் சிறந்த நடிகராகவும், ரித்திகா சிங் சிறந்த நடிகையாகவும், சமுத்திரகனி சிறந்த குணசித்ர நடிகராகவும், சாய் தன்ஷிகா சிறந்த குணசித்ர நடிகையாகவும், ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசை அமைப்பாளராகவும், தேர்ந்தெடுக்கபட்டு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது, இந்த நிகழ்ச்சியை விஜய் டி.வி. நாளை மறுநாள் (ஞாயிறு) மாலை 4 மணிமுதல் ஒளிபரப்புகிறது, இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.