பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த தெலுங்குபடமான அர்ஜுன் ரெட்டி, வசூலில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. சுமார் 5 கோடியில் தயாரான இந்தப் படம் 80 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்கிறார்கள். 7 வருடத்திற்கு முன்பு கேடி என்ற படத்தை இயக்கிய சந்தீப் வெங்கா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, காஞ்சனா, ரகுல் ராமகிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராதன் இசை அமைத்திருக்கிறார், ராஜு தொட்டா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் விஜய் தேவரகொண்டா. ஜூனியர் மாணவி ஷாலினியைக் காதலிக்கிறார். நாயகியின் அப்பா கோபிநாத் பட் இவர்கள் காதலை எதிர்க்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுன் போதையின் பாதையில் தன்னிலை மறக்கிறார். இந்த சூழலில் ஷாலினிக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதை அர்ஜுன் எப்படி எதிர்கொள்கிறார், ஷாலினி என்ன ஆகிறார், தன் மருத்துவப் பணியை அர்ஜுன் தொடர முடிகிறதா என்பது மீதிக் கதை.
வழக்கமான கதைதான் ஆனால் அதை காட்டியிருக்கும் திரைக்கதையைத்தான் எல்லோரும் மெச்சுகிறார்கள். ராஜமவுலி, அனுஷ்கா, சமந்தா, பிரபாஸ் என தெலுங்கு பிரபலங்கள் படத்தை பற்றி புகழ்ந்து நந்து கொண்டிருக்கிறார்கள். தெலுக்கு மீடியாக்கள் 4 ஸ்டார், 5 ஸ்டார் கொடுத்து வருகிறார்கள்.
இதனால் இந்தப் படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக தமிழ் ரீமேக்கிற்கு ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, விஜய் சேதுபதி, அம்மா கிரியேஷன் சிவா, சூப்பர்குட் பிலிம்ஸ் ஆகியோர் முயற்சித்து வருகிறார்கள். சிம்பு அல்லது விஜய் சேதுபதி, நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.