Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

மனிதர்களால் ஒருபோதும் கடவுளாக முடியாது : ஏ.ஆர்.ரஹ்மான்

01 செப், 2017 - 01:52 IST
எழுத்தின் அளவு:
Man-can-not-be-a-god-says-AR-Rahman

காற்றின் திசைகளை எல்லாம், தன் இசையால் நிரப்பியவர். உலகமெங்கும் தன் தனித்துவமான இசையால் அனைவரையும் வியக்க வைத்தவர், ஆஸ்கர் நாயகன், ஏ.ஆர்.ரஹ்மான். வெளிச்சம் அகன்று, சப்தங்கள் மறைந்த ஒரு நிசப்தமான இரவில், ரஹ்மான், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ஒன் ஹார்ட் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளது பற்றி...


முழுக்க முழுக்க இசை பற்றிய ஒரு தொகுப்பு தான், இந்த படம். ஒரு இசைக் கலைஞனை பற்றியது. அமெரிக்காவில், 18 முக்கியமான அம்சங்களுடன், ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினேன். அதில் சிறந்த சில விஷயங்களை தேர்வு செய்து, இந்த படத்தை தயாரித்துள்ளோம். மேலும், என் பேட்டிகள், பயணங்கள் பற்றிய விஷயங்களும் இருக்கும். ஒன்றரை மணி நேரம், ஓடக் கூடியதாக இந்த படம் இருக்கும்.


ஒன் ஹார்ட் உருவாக காரணம்?


நலிந்த இசை கலைஞர்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பு சார்பில், இந்த படத்தை எடுத்துள்ளோம். இதில் கிடைக்கும் வருவாய் அனைத்தும் அந்த அமைப்புக்கு போகும். இசை கலைஞர்களுக்காக, ஒய்.எம்.எஸ்., மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். இதில், இசை சம்பந்தப்பட்ட படங்களை மட்டுமே தயாரிப்பேன். வெளிநாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. நம் நாட்டில், முதல் முறையாக நான் முயற்சித்துள்ளேன்.


இனி உங்கள் இயக்கத்தில் நிறைய படங்கள் எதிர்பார்க்கலாமா?


ஒன் ஹார்ட் படத்தை தவிர, ஹிந்தியில், 99 என்ற படத்தை இயக்குகிறேன்; இதுவும், இசை சம்பந்தப்பட்டது தான். அடுத்ததாக, லா மாஸ்க் என்ற படத்தை இயக்குகிறேன். இது, அதி நவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த படத்தை, மற்ற படங்கள் போல், சாதாரணமாக திரையில் பார்க்க முடியாது. தலையில், மாஸ்க் அணிந்து தான் பார்க்க வேண்டும்; அப்படி ஒரு புது கான்செப்ட்; 360 டிகிரி கோணத்தில் இந்த படத்தை பார்க்க முடியும்.


உங்க வளர்ச்சிக்கு காரணமான சிலரைப் பற்றி கூற முடியுமா?


என் அம்மா, இயக்குனர் மணிரத்னம், அப்புறம் தமிழ் மக்களோட அன்பு தான், என் வளர்ச்சிக்கு காரணம்.


நடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு வந்ததா?


நடிக்கும்படி சிலர் கேட்டது உண்டு; ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஒரு நடிகராக இருக்க வேண்டுமானால், அதற்கு பெரிய முகமூடி போட வேண்டிஇருக்கும். தொப்பி, கண்ணாடி எல்லாம் போட்டு, என்னை முழுமையாக மறைத்து விட்டுத் தான் வெளியில் போகிறேன். நடிகரானால், கேட்கவே வேண்டாம்; வெளியில் தலைகாட்டவே முடியாது. எனக்கு, நடிப்பதில் ஆர்வமும் இல்லை.


ஆஸ்கர் வாங்கி, எங்களை பெருமைப் படுத்தினீர்கள்; மீண்டும் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?


ஆஸ்கரை விட, ஒன் ஹார்ட் மாதிரி, இசை தொடர்பான படங்களில் வேலை பார்ப்பதில் தான் ஆர்வம் அதிகம் உள்ளது.


மணிரத்னம் படங்கள் தோல்வி அடைவது குறித்து...


மணி சார் படம், மக்களுக்கு சில சமயங்களில் புரிய மாட்டேங்குது; அதற்கு, அவரை குற்றம் சொல்ல முடியாது. அவர் இப்போது இயக்கும் படம், அடுத்த தலைமுறையினருக்கு தான் புரியும். உயிரே படம் வந்தபோது, புரியவில்லை என, பலரும் கூறினர். ஆனால், இப்போது, அந்த படத்தை பலமுறை பார்த்ததாக பலரும் கூறுகின்றனர்.


புது இசை அமைப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


முதலில், அவங்க, என்னைப் பற்றி என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கனும் என நினைக்கிறேன். அவர்களுக்கு ஆலோசனை, அறிவுரை கூறும் அளவுக்கு, எனக்கு இன்னும் வயதாகவில்லை. அவங்க, எனக்கு அறிவுரை கூறினால், கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். (பலமாக சிரிக்கிறார்).


இசை பொதுவாக உருவாகிறதா? உருவாக்கப்படுகிறதா?


இசை என்பது சவுண்ட், ராகம். தாளம் எல்லாம் நாம் முன்பே கேட்டதுதான். அதை வரிகள் சேர்த்து புது பரிமாணத்தில் கொடுக்கும்போது வேறு ஒரு கலர் கிடைக்கும். அதனால் இசை உருவாக்கப்படுகிறது என்பதே என் கருத்து.
உங்களின் முதல் படமான ரோஜாவின் இசையை முதலில் யாருக்கு போட்டு காட்டினீர்கள்?


என் அம்மாவிற்குதான் முதலில் போட்டு காட்டினேன். ‛இது நீ செய்யல... கடவுள் ஆசீர்வாதத்தில் இந்த இசை வந்திருக்கு என்று சொன்னாங்க. மிகவும் சந்தோஷபட்டாங்க.


அப்பா, அம்மா வாங்கி கொடுத்த இசை கருவிகளை பத்திரப்படுத்தி வச்சிருக்கீங்களா?


அப்படி பத்திரப்படுத்தும் மனப்பான்மையும் எனக்கு இல்லை. நாம் போகும்போது எதையும் கொண்டு போக போவதில்லை. அன்பு, நாம் செய்த நல்ல காரியங்கள்... இதுதான் கூட வரும் என நினைக்கிறேன்.


மணிரத்தினம் உங்களுக்கு குருவா?


அவரை குருவாக நினைப்பது அவருக்கு பிடிக்காது. அவர் ஒரு நண்பரை போலத்தான் பழகுவார். நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்.


நீங்கள் சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா?


ஒன் ஹார்ட் மாதிரியான என் படங்கள் வெற்றி பெற்றால்தான் நான் சாதித்ததாக நினைக்க முடியும். மக்கள் ஆதரவு இல்லாமல் எதுவும் சாதிக்க முடியாது.சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசை அமைப்பீர்களா?


சின்ன படம், பெரிய படம் என்ற பாரபட்சமெல்லாம் எனக்கு கிடையாது. ஸ்லம்டாக் மில்லினர் படம், சிறிய பட்ஜெட்டில் தயாரானது தான். ஆனால், அந்த ஐடியா தான் பெரியது. என்னை கேட்டால், பட்ஜெட்டை விட, ஐடியாவுக்கு தான், முன்னுரிமை கொடுப்பேன்.


உங்களையும், சச்சினையும், ரசிகர்கள் கடவுளாக பார்க்கின்றனர்; இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?


என்னை, நான், நாயாகத் தான் பார்க்கிறேன். (மீண்டும் சிரிக்கிறார்). கடவுள் என்பவர், அழிக்க முடியாதவர்; அவருக்கு இறப்பே கிடையாது. அதனால், என்னைப் போன்ற மனிதர்கள், ஒருபோதும் கடவுளாக முடியாது.


சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டதால் ஏற்பட்ட வறுமை தான், உங்களை இந்த உயரத்துக்கு கொண்டு போக காரணமாக இருந்ததா?


அப்படி கூட சொல்லலாம். என் தந்தையின் நிறைவேறாத கனவுகள் அதிகம் உண்டு. அவர், கால நேரம் பார்க்காமல், குடும்பத்துக்காக, ஓடி ஓடி உழைத்தார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான், அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்து விட்டது. நான், அந்த தவறை செய்ய மாட்டேன்.


Advertisement
அப்பா அரசியலுக்கு வந்தால் கண்டிப்பா ஆதரிப்பேன்: அக்ஷ்ராஅப்பா அரசியலுக்கு வந்தால் கண்டிப்பா ... அவமானங்கள் தான் வெற்றியை தேடி கொடுத்தன: விஷ்ணு விஷால் அவமானங்கள் தான் வெற்றியை தேடி ...


வாசகர் கருத்து (23)

Venkatesh - salem,இந்தியா
01 செப், 2017 - 17:21 Report Abuse
Venkatesh திஸ் ஐஸ் தி குவாலிட்டி ஆப் கிரேட் பீப்புள்
Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
01 செப், 2017 - 17:03 Report Abuse
Ramamoorthy P தன் உயர்வுக்கு காரணம் என்று அல்லாஹ்வை கூறாமல் தன் தாய் மற்றும் தனக்கு பொருளாதார ரீதியாக தன் உயர்வுக்கு காரணமானவர்களை கூறியிருப்பதிலிருந்தே ரஹ்மான் உண்மையிலேயே ஒரு மாடரேட் தான். இருப்பினும் கஷ்ட காலத்தில் உதவுபவனும் ஆபத்தில் கை கொடுப்பவனும் கடவுளேயாவான். pathikkappattavarkalukku மனித ரூபத்தில் kadavule uthavi seykiraan.
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
01 செப், 2017 - 15:07 Report Abuse
Dol Tappi Maa கடவுளே மனிதனின் கற்பனை தான் . ஒவொரு நாட்டிலேயும் ஒரு கற்பனை , ஒரு கற்பனை மத கோட்பாடு . கடவுள் என்று ஒருத்தன் இருந்தான் என்றால் ஒரு ஒரு மதம் தான் இருந்து இருக்கும் .
Rate this:
vijayakrishnan D - chennai,இந்தியா
01 செப், 2017 - 14:52 Report Abuse
vijayakrishnan D ஒரு சச்சின் ஒரு ரஹ்மான் ஒரு அஜித் அல்லது ரஜனி அவர்களின் துறையில் உழைத்து தனி தன்மை பெற்றார்கள். இவர்களை புகழ கடவுளின் பெயரை சொல்கிறார்கள். கடவுளை காணவும்,அறியவும் அதற்கு உரிய வழிக்கு செல்ல பல கடின முறைகள் உள்ளது .அதன் பின் கடவுள் ஆகலாம்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
01 செப், 2017 - 14:15 Report Abuse
dandy நீங்கள் இந்துவாக இருந்தால் கூட புகழ் அடைந்து இருப்பீர்கள் ...காக்கை உட்க்கார பழம் விழுந்த மாதிரி ...பெயர் மாற்றிய வுடன் புகழ் வந்தது ... உங்களை உயர்த்திய ஏணிகள் எல்லாம் தமிழ் சைவர்கள்
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in