இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்த, அழகு பதுமை, மாதுரி தீட்சித். தன் தனித்தன்மை வாய்ந்த நடன அசைவுகளால், ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர். இவரது நடனத்துக்காகவே, பல படங்கள் வெள்ளி விழாவை கடந்து ஓடின.
திருமணத்துக்கு பின், நடிப்புக்கு இடைவெளி விட்ட மாதுரி, பின், சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தார். தற்போது, மீண்டும் முழு வீச்சில் திரைத்துறையில் களம் இறங்கியுள்ளார்; ஆனால், நடிகையாக அல்ல தயாரிப்பாளராக. ஆர்.என்.எம்., என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ள மாதுரி, முதல் முயற்சியாக, மராத்தி மொழி திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளன. மாதுரி கூறுகையில், 'என்னையும், சினிமாவையும் அவ்வளவு எளிதாக பிரித்து விட முடியாது. நடிப்பு, நடனம், தயாரிப்பு என, ஏதாவது ஒரு விஷயத்தில் தொடர்ந்து திரைத்துறையில் பணியாற்றுவேன். இப்போது, மராத்தியில் படம் தயாரிக்கிறேன்; இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழி படங்களையும் தயாரிப்பேன்' என்கிறார்.