ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்றவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் இயக்கும் புதிய படம் 'நரகாசுரன்'. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தை கௌதம் மேனன் தயாரிக்கிறார்.
அர்விந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் ஆகிய மூவரும் இந்தப்படத்தில் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.கதாநாயகியாக ஸ்ரேயா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப்படத்தில் புதிதாக நடிகை ஆத்மிகாவும் இணைந்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா இயக்கி நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மீசைய முறுக்கு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.
அர்விந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிப்பதாகவும், சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்க ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 'மாயா' படத்துக்கு இசையமைத்த ரான் எத்தன் யோஹான் 'நரகாசுரன்' படத்திற்கு இசையமைக்கிறார். செப்டம்பர் 16ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.