இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் முதன்முறையாக வியாழக்கிழமை சென்டிமென்ட் தொடங்கியது.
வியாழக்கிழமைதான் சாய்பாபாவுக்கு உகந்தநாள் என்று ஆரம்பம் படத்தின் டைட்டில் அறிவிப்பு, இசை வெளியீடு, டீஸர் ரிலீஸ் என அனைத்தையும் வியாழக்கிழமையிலேயே நடத்தினர் சாய்பாபா பக்தரான ஏ.எம்.ரத்னம். அடுத்த கட்டமாக ஆரம்பம் படத்தையே வியாழக்கிழமை அன்று வெளியிட்டார்.
அதேபோல், அஜித் - ஏ.எம்.ரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்த 'என்னை அறிந்தால்' படத்திலும் இந்த வியாழக்கிழமை சென்ட்டிமெண்ட் தொடர்ந்தது. அஜித்தின் லேட்டஸ்ட் ரிலீஸான 'விவேகம்' படத்திலும் இந்த சென்டிமென்ட் தொடர்ந்த நிலையில், இப்போது இதே சென்டிமென்ட்டை விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்திற்கும் பின்பற்றத் துவங்கியுள்ளனர்.
'கருப்பன்' படத்தின் இசை வெளியீட்டை ஆகஸ்ட் 31, வியாழக்கிழமை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கருப்பன் படத்தை தயாரித்திருப்பதும் ஏ.எம்.ரத்னம்தான். எனவே தான், இந்தப் படத்திற்கும் வியாழக்கிழமையை ஆடியோ ரிலீஸுக்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.