Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேகம் ரிசல்ட் எதிரொலி, சொந்த வெளியீட்டில் மெர்சல்

31 ஆக, 2017 - 12:38 IST
எழுத்தின் அளவு:
After-vivegam-result,-mersal-to-be-self-release

விவேகம் படத்திற்கு இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும், படத்திற்கு வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலை நன்றாகவே பாதித்தன. ஹாலிவுட் ஸ்டைலில் படத்தின் டீசரை மட்டும் வெளியிட்ட இயக்குனர் சிவா, படத்தில் பல லாஜிக் ஓட்டைகளை வைத்து பலரும் படத்தை விமர்சிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார். அதோடு, படத்தின் தயாரிப்பாளர் அவருடைய முந்தைய தோல்விப் படங்களான தொடரி, சத்ரியன் ஆகியவற்றின் பாதிப்பில் இருந்ததால், விவேகம் வெளியீட்டின் போது அந்தப் படங்களின் நஷ்டங்களையும் சரிக்கட்டியிருக்கிறார். இதனால், சில ஏரியாக்களில் விவேகம் படத்தை அவரே சொந்தமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை உருவானது. படத்திற்கும் ஆரம்ப நாட்களில் இருந்த வசூல் போகப் போகக் குறைந்ததால் படத்திற்கு நஷ்டம் வரும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

விவேகம் படத்தின் ரிசல்ட் திரையுலக வட்டாரங்களில் பரவிவிட்டதால் அது மெர்சல் படத்தின் வினியோகத்திற்கும் ஒரு முட்டுக்கட்டையைப் போட்டுள்ளது. படத்திற்கு அதிக விலை கொடுத்து வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. விவேகம் படத்தை விட மெர்சல் படத்தின் பட்ஜெட் அதிகம் என்கிறார்கள். அதனால், மெர்சல் படத்தின் வியாபார விலை நிச்சயம் அதிகமிருக்கும். ஆகவே, எதற்கு தேவையில்லாத பிரச்சனைகளை வளர்த்துக் கொள்வது என நினைத்த மெர்சல் தயாரிப்பாளர்கள் படத்தை சொந்தமாகவே அனைத்து ஏரியாக்களிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். தொடர்ந்து அவர்கள் பல பெரிய படங்களை கைவசம் வைத்திருப்பதால் அவர்களால் எதனையும் சமாளிக்க முடியும் என்பதே அதற்குக் காரணம்.


Advertisement
திருட்டுப்பயலே-2 கிளாமர் இமேஜ் ஏற்படுத்தாது -அமலாபால்திருட்டுப்பயலே-2 கிளாமர் இமேஜ் ... நாளை அறிமுக இயக்குனர்களின் மும்முனைப் போட்டி நாளை அறிமுக இயக்குனர்களின் ...


வாசகர் கருத்து (10)

kumar -  ( Posted via: Dinamalar Android App )
01 செப், 2017 - 11:42 Report Abuse
kumar padam mokka
Rate this:
Karthik - Tirupur,இந்தியா
01 செப், 2017 - 10:23 Report Abuse
Karthik இந்த படம் ரொம்ப சுமார் தான் நான் கடந்த நான்கு நாட்களாக பாத்துக்கொண்டு தான் இருக்கிறேன் எந்த தேட்டர்லயும் 30 சீட் மேல புக் ஆகல, இதுல போய் 100 கோடி னு பொய் சொல்றாங்க, அஜித் நல்ல நடிகர் தான் தமிழ் நாட்டில் எத்தனையோ பிரட்சனை இருக்கு, அத வெச்சு படம் பண்ணாம, எதுக்கு ஹாலிவுட், செலவு பண்றது பூரா வெளிநாட்ல, வருமானம் மட்டும் தமிழ்நாடா, நல்லா இருக்கு, இந்த முறை, இனியாவது நல்ல படம் பண்ணுங்க
Rate this:
01 செப், 2017 - 08:27 Report Abuse
RameshPrabhu VIVEGAM PADAM NALLATHAN IRUKKU YARU SONNATHU NALLALAINU
Rate this:
shankar - chennai,இந்தியா
01 செப், 2017 - 08:10 Report Abuse
shankar theatre running with only seats and no audience, worst movie lots of logic missing,
Rate this:
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
01 செப், 2017 - 08:10 Report Abuse
KALIHT LURA நரை என்பது முதுமையின் அடையாளம். இவர் நரையுடன் இருந்தாலும் கல்லூரி பெண்கள் இவரை காதலிப்பார்களாம் இது என்ன லாஜிக் ....
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Abhiyum Anuvum
  • அபியும் அனுவும்
  • நடிகர் : டொவினோ தாமஸ்
  • நடிகை : பியா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிஆர் விஜயலட்சுமி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in