வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சமீப நாட்களாக மீடியாவில் அதிகமாக அடிபடும் நடிகராக பாலகிருஷ்ணாவை சொல்லலாம். காரணம் தனது உதவியாளர், ரசிகர் என எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அரைந்து அதன் காரணமாக சோஷியல் மீடியாவில் நெகடிவ் பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருகிறார் பாலகிருஷ்ணா. இவரது அடுத்த படமான 'பைசா வசூல்' வரும் செப்-1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது..
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை சார்மி, பாலகிருஷ்ணாவின் சிறப்புக்களை சொல்லிக்கொண்டே வந்தவர், பாலகிருஷ்ணாவின் செல்லப்பெயர் என்னவென்று தெரியுமா என ஒரு கேள்வியை போட்டார். இதனால் பார்வையாளர்களின் மத்தியில் எதிர்பார்ப்பும் பாலகிருஷ்ணா முகத்தில் வெட்கமும் ஒருசேர எழுந்தன. மற்றவர்கள் எப்படியோ பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் நடிகைகள் அவரை 'பாலா' என சுருக்கமாக, செல்லமாக அழைக்கவேண்டும் என அந்த ரகசியத்தை மேடையில் உடைத்தார் சார்மி. இப்படி பெயர்சொல்லி அழைக்கும் விஷயத்தில் தன்னை இளமையாக உணர்வதற்காகவே தான் சீனியர் நடிகராச்சே என நடிகைகளிடம் வயது வித்தியாசம் பார்க்க மாட்டாராம் பாலகிருஷ்ணா.