ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான 'பைரவா' படம் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றபோதும், தீபாவளிக்கு வெளிவரும் 'மெர்சல்' படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க 'மெர்சல்' படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார்? என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களின் மண்டையைக்காய வைத்துக் கொண்டிருக்கிறது. மெர்சல் துவங்கப்பட்டபோது விஜய்க்கு மூன்று கேரக்டர்கள் என்ற சொல்லப்பட்டது. ஆனால், இப்போதுவரை விஜய்யின் இரண்டு தோற்றங்கள் மட்டுமே அதாவது, மெஜீஷியன், கிராமத்து வேடம் மட்டுமே வெளியாகி இருக்கிறது.
''இரட்டை வேடங்களில் நடிப்பதால் படத்தின் வேலைகள் இழுத்துக் கொண்டே செல்கின்றன!'' என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் விஜய்.
இந்த தகவல்களுக்கு மாறாக, அண்மையில் நடைபெற்ற மெர்சல், ஆடியோ வெளியீட்டு விழாவின்போது படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, ''படத்தில் மூன்று தளபதி இருக்கிறார்கள்!'' என்று சொன்னார்.
இப்படியாக, மெர்சல் படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறித்து மாறுபட்ட தகவல்களை சொல்லி குழப்பி வருகின்றனர்.