சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
ரேஸ், ரேஸ் 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து ரேஸ் 3 உருவாக உள்ளது. சைப் அலிகானுக்கு பதிலாக சல்மான் கான் ஹீரோவாக நடிக்க, ரெமோ டிசோசா இயக்குகிறார். சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக இருப்பதாக தயாரிப்பாளர் ரமேஷ் தருணாய் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது... "ரேஸ் 3யில் சல்மான்-ஜாக்குலின் நடிக்கிறார்கள், ரெமோ இயக்குகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் முதல் மும்பையில் ரேஸ் 3 படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. தொடர்ந்து வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கான தேதியும் முடிவாகி உள்ளது. முந்தைய பாகத்தை விட ரேஸ் 3 முற்றிலும் வித்தியாசமான புதிய கதைக்களத்தில் உருவாக உள்ளது" என்றார்.
அக்டோபரில் ரேஸ் 3 படத்தை ஆரம்பிப்பவர்கள் 2018, ரம்ஜான் பண்டிகையின் போது படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.