'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர், விக்ரமை வைத்து ஸ்கெட்ச் என்ற படத்தை இயக்கியுள்ளார். முதன்முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார் தமன்னா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. பொதுவாக தமன்னா என்றாலே படத்தில் ஹோம்லியாக நடித்தாலும் கூட ஓரிரு பாடல்களில் கிளாமராக நடித்து இளவட்ட ரசிகர்களை அட்டாக் பண்ணி விடுவார்.
ஆனால், இந்த ஸ்கெட்ச் படத்தில் தமன்னாவின் கவர்ச்சிக்கு வேலை இல்லாமல் போய்விட்டதாம். காரணம், வட சென்னையைச் சேர்ந்த குடும்ப பெண் வேடத்தில் அவர் நடித்துள்ளார். அதோடு, படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு டூயட் பாடல் காட்சிகளிலும், பெரிதாக கிளாமரை வெளிப்படுத்தாமல் ஹோம்லியாக தான் வருகிறாராம் தமன்னா.