இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி மூன்று மொழிகளில் நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்திற்கு இணையான கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்த படம் உருவாகயிருப்பதால், படப்பிடிப்பு, ஸ்பெசல் எபெக்ட்ஸ் வேலைகளுக்காக மட்டுமே மினிமம் 14 மாதங்கள் ஆகுமாம். அதோடு, வெள்ளைக்காரர்களுக்கு எதிரான நடந்த சில முக்கிய போராட்டங்களும் இந்த படத்தில் இடம்பெறுவதால், அந்த காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கப்போகிறார்களாம். அதனால், தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தை 2019ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.