தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் தற்போது நடித்து வரும் படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தேனாண்டாள் ஸ்டூடியோ சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார். கிராமத்து பஞ்சாயத்து தலைவர், டாக்டர், மற்றும் மேஜிக் நிபுணர் ஆகிய கேரக்டர்களில் நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் நடிக்க அதற்குரிய மேக்அப்பும், உடைகளும் அணிந்தால் அந்த கேரக்டராக மாறிவிடலாம். ஆனால் மேஜிக் நிபுணராக நடிக்க கொஞ்சம் மேஜிக் தெரிந்திருக்க வேண்டும். அதனால் விஜய் நிறைய மேஜிக் விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்பினார்.
இதற்காக வெளிநாட்டு மேஜிக் நிபுணர் கோகோ ரெக்கியூம் என்ற மேஜிக் நிபுணர் வரவழைக்கப்பட்டார். அவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்து சில அடிப்படையான மேஜிக் விஷயங்களை விஜய்க்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அதோடு மேஜிக் தொடர்பான காட்சிகளை படமாக்குவதற்கு ஆலோசகராக பணியாற்றி இருக்கிறார்.
இது தொடர்பாக கோகோ தனது டுவிட்டரில் "மிகவும் புகழ்பெற்ற தமிழ் நடிகர் ஜோசப் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். அதோடு விஜய்க்கு சீட்டுக்கட்டு மேஜிக் கற்றுக் கொடுக்கும் படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.