ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஆரம்பகாலத்தில் தனக்கு வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்கள் அடுத்தடுத்த படங்களில் தோற்றுப்போய்விட்டால் அவர்களை அழைத்து படம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. கார்த்திக் சுப்பாராஜ், பாலாஜி தரணிதரன், அருண்குமார் ஆகியோர் வரிசையில் தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' கோகுலுக்கும் பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
காஷ்மோரா படத்தை தொடர்ந்து கோகுல், ஒரு படத்தை இயக்குகிறார். 'ஜுங்கா' என்று பெயடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க 'வனமகன்' சாயிஷா சாய்கல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சாயிஷாவுக்கு கதை சொல்ல அணுகியபோது, முதலில் டைரக்டர் ஏ.எல்.விஜய்யிடம் சொல்லும்படி கேட்டுக்கொண்டாராம். கதை கேட்டு விஜய் ஓகே சொன்ன பிறகே நடிக்க சம்மதித்தாராம் சாயிஷா. இந்தப் படத்தில் நடிக்க சாயிஷாவுக்கு 50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்திற்கான படப்பிடிப்பை பாரிஸில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.