தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களைத் தொடர்ந்து 'சோலோ' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான். விக்ரம், ஜீவாவை வைத்து 'டேவிட்' என்ற மொக்கப் படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகும் மலையாளப்படம் இது.
நேரடி தமிழ்ப்படம் என்ற பெயரில் தமிழிலும் வெளியாக உள்ள இந்தப்படத்தில் துல்கருக்கு நான்கு வித்தியாசமான தோற்றங்கள். அதனால் படத்தில் நான்கு விதமான கதைகள் இடம் பெறுவது போல் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படத்தில் நேஹா சர்மா, ஸ்ருதிஹரிகரன், தன்ஷிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
பிரசாந்த் பிள்ளை இசையமைப்பில் இப்படத்திற்காக உருவான 'ரோஷோமோன்....' என்ற சிங்கிள் டிராக்கை சமீபத்தில் வெளியிட்டனர். 'ரோஷோமோன்....' என்பது உலகப்புகழ்பெற்ற இயக்குநரான அகிரா குரோசோவாவின் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
குரோசோவாவின் படத்தின் பெயரை ஏன் பாடல் வரியாக தேர்ந்தெடுத்தார்கள்? ஒருவேளை நான்கு கதைகளில் ஒரு கதை ஜப்பான் பின்னணியில் நடக்கிற கதையாக இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது.
இந்தப்படத்தின் ஆடியோ ரைட்ஸை 'டிரெண்ட் மியூசிக்' நிறுவனம் வாங்கியிருக்கிறது.