பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரோமியோ ஜூலியட் படத்தைத் தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடித்த படம் போகன். இந்த படத்திலும் ரோமியோ ஜூலியட்டில் ஹன்சிகாவே நாயகியாக நடித்திருந்தார். அதேப்போல், மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமி இந்த படத்தில் வில்லனாக நடித்தார். கூடு விட்டு கூடு பாயும் ஒரு கதையில் இந்த போகன் தயாராகியிருந்தது.
போகன் படம் பெரிய ஹிட் இல்லை என்றபோதும் கதைக்களம் வித்தியாசமாக இருந்ததால் தற்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். ஜெயம்ரவி நடித்த நாயகன் வேடத்தில் ரவிதேஜாவும், ஹன்சிகா நடித்த நாயகி வேடத்தில் கேத்ரின் தெரசாவும் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பது முடிவாகவில்லை. தெலுங்கிலும் அரவிந்த்சாமியே நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்பது விரைவில் தெரிந்து விடும்.