ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் தேசியவிருது பெற்ற, காமெடி கம் குணச்சித்திர நடிகரான சலீம்குமார், கடந்த 2015ல் 'கம்பார்ட்மென்ட்' என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார். இந்தப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 75 லட்சம் தான். இந்தப்படத்தில் நடித்த சுரேஷ்கோபி, கலாபவன் மணி, கே.பி.ஏ.சி.லலிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டார்கள். காரணம் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மையப்படுத்தி, இந்தப்படத்தை உருவாக்கியிருந்தார் சலீம்குமார்.
ஆனால் இந்தப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பில்லை.. அதன்பின் கடந்த வருடம் 'கருத்த ஜூதன்' என்கிற படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு சிறந்த கதைக்கான கேரளா அரசின் விருதும் கிடைத்தது.. இந்தப்படம் கடந்த வரம் வெளியானாலும் முந்தைய படத்தைப்போல இதற்கும் பெரிய வரவேற்பில்லை. இந்தநிலையில் தனது மூன்றாவது படத்தை இயக்கம் வேலைகளை ஆரம்பித்துவிட்ட சலீம்குமார், இந்தப்படத்தில் ஜெயராமை கதாநாயகனாக்கி இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களையும் ஒன்றுசேர்த்து கமர்ஷியல் பார்முலாவில் உருவாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.