மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2. O. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது படத்தின் வியாபாரம் தொடங்கியிருக்கிறது.
அந்தவகையில், 2.O படத்தின் தெலுங்கு விநியோக உரிமை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திரா,தெலுங்கானா என்ற இரண்டு மாநிலங்களும் சேர்த்து ரூ. 81 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான ரோபோ படத்தின் தெலுங்கு ரைட்ஸ் ரூ. 27 கோடிக்குத்தான் விற்பனையாகியிருக்கிறது. அந்தவகையில், இந்த 2.O படம் மூன்று மடங்கு அதிகமாக விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.