கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சர்ச்சையான கருத்துகளை கண்களை மூடிக்கொண்டு வெளியிடுவதில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு முதலிடம் என்றால் அவரது பினாமி என்று சொல்லும் அளவுக்கு, பிரபலங்கள் மீது சர்ச்சையான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் பாலிவுட் நடிகரான கமால் ரஷீத் கான்.. இவர் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் நடிகர் அல்ல.. சின்னத்திரை மற்றும் யூடியூப் விமர்சனங்கள் மூலமாக பிரபலமான இவர் இந்திப்படங்களில் துண்டு, துக்கடா வேடங்களில் தலைகாட்டி வருபவர்..
ஒவ்வொரு மொழியிலும் உள்ள பிரபலங்கள் குறித்தும் கிண்டலான வார்த்தைகளை கூறி அதன்மூலம் மலிவான விளம்பரம் தேடிக்கொள்வதுதான் இந்த கமால் ரஷீத் கானின் நோக்கம்.. அதன்படி 'புலி முருகன்' வெளியான சமயத்தில் மோகன்லாலை ஜோக்கர், சோட்டா பீம் என கிண்டலடித்தார். மம்முட்டியை 'சி' கிளாஸ் நடிகர் என்றார்.. உலகமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்திய 'பாகுபலி-2'வை கார்ட்டூன் படம் என்றார். இதற்காக சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக்கட்டியும் கொண்டவர்.. ஆனாலும் திருந்திய பாட்டை காணோம்..
இப்போது இவரது டார்கெட்டுக்கு ஆளாகி இருக்கிறார் அஜித்.. ஆம், சமீபத்தில் வெளியாகியுள்ள அஜித்தின் விவேகத்தை பார்த்த இந்த கமால் ரஷீத் கான், அஜித்தின் தோற்றம் குறித்து கிண்டலடித்துள்ளார்.. “அஜித்ஜி.. குறிப்பாக உங்களைப்போன்ற வயதான நடிகர்கள் எங்களது பாலிவுட்டில் அப்பா வேடத்தில் தான் நடிப்பார்கள்.. ஆனால் தமிழ் ரசிகர்கள் எப்படி உங்களை ஹீரோவாக ஏற்றுக்கொள்கிறார்களோ தெரியவில்லை.. விவேகம் படத்திற்கு வாழ்த்துக்கள்” என அஜித்தை பற்றி கிண்டலடித்துள்ளார்.. அதன் விளைவாக தற்போதுவரை அஜித் ரசிகர்களால் தொடர்ந்து வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார் இந்த கமால் ரஷீத் கான்.