தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா. பெரிய அளவில் ஜெயிக்க முடியாவிட்டாலும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். விஜய் டி.வி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் திடீரென பிரபலமானார். இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் நடித்து முடித்துள்ள சீனி என்ற படம் தற்போது ஓவியாவ விட்டா யாரு என்று தலைப்பு மாற்றி வெளிவர இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ஓவியா நடித்துள்ள மலையாளப்படங்களை டப் செய்து இங்கு வெளியிட கடும் போட்டி இருக்கிறது. அந்த வரிசையில் முதலில் வரப்போகிறது ஓவியா நடிடித்த மனுஷ்யமிருகம் என்ற மலையாளப்படம்.
6 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படத்தில் பிருத்விராஜ், கிரண், ஓவியா நடித்திருந்தார்கள். பாபுராஜ் என்பவர் இயக்கி அவரும் நடித்திருந்தார். அன்வர் இசை அமைத்திருந்தார், கே.வி.சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தை தற்போது போலீஸ் ராஜ்யம் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஜெய்பாரதி மற்றும் அன்னபூரணி மூவீஸ் சார்பில் கே.அருணாசலம் வெளியிடுகிறார். தமிழ் பாடல் மற்றும் வசனங்களை புலவர் சிதம்பரநாதன் எழுதுகிறார்.