Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குப்பத்து ராஜாவான ஜி.வி.பிரகாஷ்

27 ஆக, 2017 - 16:14 IST
எழுத்தின் அளவு:
g.v.prakash-turns-kuppatthu-raja

ஒரே நேரத்தில் 10 படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். 2019 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் நிறைந்திருக்கிறது. இசை அமைப்பதையும் நிறுத்தி வைத்திருக்கிறார். அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று குப்பத்துராஜா. சூப்பர் ஸ்டார் ரஜினியின் டைட்டிலில் சத்தமே இல்லாமல் நடித்த வருகிறார். இதனை போக்கஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சரவணன், டி.சரவணன், சிராஜ் தயாரிக்கிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடித்துள்ளனர். பார்த்திபன், எம்.எஸ் பாஸ்கர், யோகி பாபு மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் குப்பத்து ராஜா உருவாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கி உள்ளார். படத்தை தயாரிக்கும் விநியோகஸ்தர் சரவணன் படம் பற்றி கூறியதாவது:

சினிமா ரசிகர்களின் ரசனையை பலகாலமாக விநியோகஸ்தர்களாக இருந்து கண்டறிந்ததால் சினிமா தயாரிப்பில் கால் எடுத்துவைக்க முடிவு செய்தோம். தயாரிப்பாளர்களின் விருப்பமாகவும் இன்றைய இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்படும் கதாநாயகனாக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அவரது கதாநாயகன் அந்தஸ்து கூடி வருவதை எல்லோரும் காணலாம். குப்பத்து ராஜா படத்தின் கதையை பாபா பாஸ்கர் அவர்கள் எங்களிடம் கூறியபொழுது நாங்கள் ஆச்சிரியப்பட்டோம் .


பிரபல நடன இயக்குனரான அவருக்குள் இப்படி ஒரு திறமையான இயக்குனர் இருக்கிறார் என்பது எங்களுக்கு அன்று தான் தெரிந்தது. அவரது படமாக்கும் முறையும் எங்களை மிகவும் கவர்ந்தது. ரஜினி சாரின் வெற்றி தலைப்பு என்பதால் மட்டுமில்லாமல் இக்கதைக்கும் மிக சரியாக பொருந்துவதால் குப்பத்து ராஜா தலைப்பை சூட்டினோம். வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்களில் ரிலீசாகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in