தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர் நடிப்பில் உருவாகி வரும் படம் பலூன். புதுமுகம் சினிஷ் இயக்குகிறார். சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன் தயாரிக்கிறார். இந்தப் படம் முடிந்து விட்டபோதிலும் இன்னும் ஒரு பாடல் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற எல்லோரும் கருத்து சொல்ல அதை ஏற்று தற்போது ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. யுவன் இசையில் அனிருத் அந்தப் பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் சினிஷ் கூறியதாவது:
ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ விளம்பர யுக்திகளும் அவ்வளவு முக்கியம் என்பதை நம்புபவன் நான். இன்றைய சினிமாவில் விளம்பர யுக்திகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. சுவாரஸ்யமான கூட்டணிகளை அமைப்பது படத்தின் விளம்பரத்திற்கு பேராதரவாக இருக்கும். பலூன் படத்தின் ஒரு பாடலிற்கான விவாதத்தில் நானும் அதன் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா இருந்தபொழுது ஓவியாவின் பிரபலமான நீங்க ஷட் டப் பண்ணுங்க என்ற வரி எங்களுக்கு தோன்றியது. இந்த யோசனையை யுவனிடம் கூறியபொழுது அவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதனை அனிருத் பாடினால் அசத்தலாக இருக்கும் என்று கூறினார்.
இது குறித்து தயக்கத்துடன் நான் அனிருத்தை அணுகியபொழுது அவர் மறு யோசனையின்றி உடனே பாட சம்மதித்தார். யுவனும் அனிருத்தும் ஒன்று சேர்ந்து எந்த வித ஈகோவும் இன்றி ஒன்று சேர்ந்து பணியாற்றி கலக்கியுள்ளனர். அவர்கள் இருவரிடையே ஒருவர் மீது மற்றொவர் வைத்திருக்கும் மரியாதை அழகாக இருந்தது. இவர்கள் இருவரின் இந்த அழாகான நட்பு இப்பாடலின் தரத்திலும் குதூகலத்தில் வெளிப்பட்டது. இந்த நீங்க sலீut uஜீ பண்ணுங்க பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்படும் என உறுதியாக நம்புகிறேன். என்கிறார் இயக்குனர் சினிஷ்.