‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான அறிமுக விழாவுடன் ஆரம்பமான அந்தப் படம் தற்போது கைவிடப்பட்டுவிட்டது. 'வனமகன்' பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் சினிமாவின் அடுத்த சிம்ரன் என வர்ணிக்கப்பட்ட சாயிஷாவுக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலை உருவானது.
இருந்தாலும் அவருக்கு தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. 'காஷ்மோரா' படத்திற்குப் பிறகு கோகுல் இயக்க உள்ள 'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா ஜோடிகளாக நடிக்கின்றனர். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் மூலம் விஜய் சேதுபதியை வேறு ஒரு தளத்தில் காட்டிய இயக்குனர் கோகுல், விஜய் சேதுபதி மீண்டும் இணைய உள்ள இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஆரம்பமாகிவிட்டது.
'காஷ்மோரா' படம் தோல்வியடைந்தாலும் கோகுல் அடுத்த பட வாய்ப்பை உடனே கைப்பற்றிவிட்டார். அவருக்கு தக்க சமயத்தில் விஜய் சேதுபதியும் கைகொடுத்துள்ளார். இந்த 'ஜுங்கா' வில் கோகுல் ஏமாற்ற மாட்டார் என நம்புவோம்.