ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகியுள்ள மெகா படம் ஸ்பைடர். இந்த படத்தில் ராகுல்பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும், படம் செப்டம்பர் 27-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும், ஸ்பைடர் படத்தின் ஒரு டூயட் பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது மகேஷ்பாபு, பாரத் அனி நேனு படப்பிடிப்பு கலந்து கொண்டு வருவதால், தள்ளிக்கொண்டே வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக அந்த பாடலை படமாக்க ரோமானியா நாட்டில் முகாமிட்டுள்ளது ஸ்பைடர் டீம். அந்த பாடல் காட்சியில் மகேஷ்பாபு, ராகுல்பிரீத்சிங் ஆகிய இருவரும் நடனமாடிக் கொண்டிக்கிறார்களாம். இந்த பாடல் காட்சியோடு ஸ்பைடர் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைகிறது.