தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்ப்படங்களில் கூட விஜய்க்கு இவ்வளவு பில்டப் கொடுத்திருப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த அளவுக்கு விஜய்யின் புகழ்பாடும் விதமாக மலையாளத்தில் உருவாகியுள்ள 'போக்கிரி சைமன்' படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார்கள். கேரளாவில் விஜய்க்கென ரசிகர்கள் அதிகம் இருப்பதால், அதை பின்னணியாக கொண்டு தற்போது விஜய்யின் கேரக்டரையும், அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' என்கிற பெயரில் ஒரு படத்தையே உருவாக்கி வருகின்றனர்
இதில் விஜய் ரசிகராக 'போக்கிரி சைமன்' என்கிற கேரக்டரில் துல்கரின் நண்பரான சன்னி வெய்ன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரயாக மார்ட்டின் நடித்துள்ள இந்தப்படம் வரும் செப்-15ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப்படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் முழுக்க முழுக்க விஜய் புகழ்பாடும் விதமாக, அவரது முந்தைய படங்களின் பெயர்களை எல்லாம் பாட்டில் இடம்பெறச்செய்து, கிட்டத்தட்ட ஒரு முழு தமிழ்ப்பாடலாகவே இதை உருவாக்கியுள்ளனர். நம்ம ஊர் விஜய் ரசிகர்கள் இதை பார்த்தால், கேரளாவில் நம்மை மிஞ்சும் அளவுக்கு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்களே என ஆச்சர்யத்தில் வாய்பிளப்பது உறுதி.