Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் ஒரு சாதனைக்கு தயாரான 'பிரேமம்' நண்பர்கள் குழு..!

26 ஆக, 2017 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Another-premam-team-formed

வரும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக நிவின்பாலி நடித்துள்ள 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' என்கிற படம் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அல்தாப் சலீம்.. இவர் வேறு யாருமல்ல.. 'பிரேமம்' படத்தில் நிவின்பாலியுடன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர் தான். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனின் பாடிகார்டாக கூடவே வருவாரரே ஒரு பையன்.. அவர்தான் இவர்,, அல்போன்ஸ் புத்ரனிடம் உதவி இயக்குனராக கொஞ்சமே கொஞ்ச நாள் மட்டும் வேலைபார்த்தவர்.. அதுமட்டுமல்ல நிவின் பாலியின் நெருங்கிய நண்பரும் கூட.

இவர் சொன்ன 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தின் கதை நிவின்பாலிக்கு பிடித்துப்போனதாலும், இவரின் திறமை பற்றி நேரிலேயே பார்த்திருந்ததாலும் இந்தப்படத்தில் அவரை இயக்குனராக மாற்றி அந்தப்படத்தை தானே தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார் நிவின்பாலி. அதுமட்டுமல்ல, பிரேமம் படத்தில் அறிமுகமான 'ஷராபுதீன், கிருஷ்ண சங்கர், ஷிஜூ வில்சன் ஆகியோரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கதாநாயகிகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஆஹானா கிருஷ்ணா ஆகியோர் தான் புதுசு. அந்தவகையில் இது பிரேமம் கூட்டணியின் இன்னொரு படம் என்பதால் நிச்சயம் அந்தப்படத்தின் எதிர்பார்ப்பில் பாதியையாவது ஈடுசெய்யும் என எதிர்பார்க்கலாம். செப்-1ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in