Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விவேகம்' - ஜெயிக்கப் போவது விமர்சனமா, வசூலா ?

26 ஆக, 2017 - 16:53 IST
எழுத்தின் அளவு:
Who-will-win?-Vivegam-critics-or-Collection

ஒவ்வொரு பெரிய நடிகரின் படம் வரும் போதும் அந்தப் படங்கள் பற்றிய விமர்சனங்கள் எதிர்மறையாக வருவதும், அதே சயமம் வசூலும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த நிலைமை தற்போது 'விவேகம்' படத்திற்கும் வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'விவேகம்' படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

பெரும் ரசிகர் கூட்டத்தைத் தன் பக்கம் வைத்திருக்கும் அஜித் போன்ற ஒரு நடிகர் துளியும் 'லாஜிக்' இல்லாத ஒரு படத்தில் நடித்திருக்கிறாரே, எதிரிகள் சூழ்ந்து நின்று கொல்ல வரும் சமயத்தில் கூட 'பன்ச்' டயலாக் பேசிக் கொண்டிருக்கிறாரே என கமெண்ட் அடித்து வருகிறார்கள். மேலும், படம் பற்றி பலர் விமர்சித்த நிலையில் இந்த விமர்சனங்கள் திரையுலகில் ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது.

ஒரு படத்தைப் பற்றி எந்த விதமான பகுப்பாய்வும் இல்லாத நிலையில் தங்களை விமர்சகர்கள் என சொல்லிக் கொண்டுத் திரியும் சிலரை திரையுலகினர் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஆட்களை திரையுகினர் சிலரும் ஆதரவு கொடுத்து வளர்த்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இருந்தாலும் விமர்சனங்களை மீறி 'விவேகம்' படம் முதல் இரண்டு நாட்களில் 50 கோடி வரை வசூலித்துள்ளதாக சிலர் தெரிவிக்கிறார்கள். 'கபாலி' படத்திற்கடுத்து 'விவேகம்' படம் வசூலில் பல ஏரியாக்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக யாரும் வசூல் நிலவரங்களைத் தெரிவிக்காத நிலையில் எந்த ஆதாரத்துடன் இப்படிப்பட்ட வசூல் தொகைகள் வெளியாகிறது என்பது நடுநிலையாளர்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரோ, வினியோகஸ்தர்களோ சொன்னால்தான் படத்தின் உண்மையான வெற்றி என்னவென்பது தெரிய வரும்.

'லிங்கா' படம் வசூலிக்கவில்லை என்பதை அப்படத்தின் வினியோகஸ்தர்களே அறிவித்து பல கோடி ரூபாய் நஷ்டத்தைக் கேட்டார்கள். ஆனால், லாபம் வந்தால் யாரும் வாயைத் திறப்பதில்லை. 'விவேகம்' படம் லாபம் என்றால் சத்தம் வெளியில் கேட்காது, அதே நஷ்டம் என்றால் இன்னும் சில நாட்களில் வினியோகஸ்தர்களின் ஆடியோ ஏதாவது ஒரு வாட்ஸ்-அப் குழுவில் பரவ ஆரம்பிக்கும். அதுவரை, பொறுத்திருக்கும் குணம் ரசிகர்களிடம் இருக்குமா...?.

Advertisement
அறிவழகன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்அறிவழகன் இயக்கத்தில் ... சந்தானம் ஜோடியாக சாய் பல்லவி சந்தானம் ஜோடியாக சாய் பல்லவி


வாசகர் கருத்து (16)

DAWANJITH - thanjavur  ( Posted via: Dinamalar Windows App )
27 ஆக, 2017 - 11:48 Report Abuse
DAWANJITH ஈஈஈ படம் நல்லா இருக்கு சூப்பர்
Rate this:
wellington - thoothukudi,இந்தியா
27 ஆக, 2017 - 11:40 Report Abuse
wellington உலகத்தை நடத்திக்கொண்டிருக்கும் secret societies பற்றி இந்த படத்தில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது ,ஹாலிவுட் படங்களில்தான் இந்த மாதிரி உண்மைகள் சொல்லப்படும் முதன்முறையாக தமிழ் படத்தில் கூறியிருப்பது வெகுவாகபாராட்டப்படவேண்டியது ,ஏனென்றால் தமிழ் மக்களுக்கு இன்னும் நிறைய உண்மைகள் தெரியவேண்டியதாயிருக்கிறது ,அப்படித்தெரிந்துவிட்டால் மக்களுக்கு எதிராக நடக்கும் அரசுக்களுக்கு எதிராக போராட தயங்கமாட்டார்கள் ,இன்னும் இது போன்ற நிறைய படங்கள் வரவேண்டும் ,முதல் முயற்சி எடுத்த அஜித்தை பாராட்டவேண்டும் .
Rate this:
ganesh - chennai,இந்தியா
27 ஆக, 2017 - 11:10 Report Abuse
ganesh படத்தை எடுக்கும்பொழுதே, எடிட்டிங் , ரீ ரெகார்டிங், பிரிவியூ ஷோ ன்னு எல்லாம் பாத்துட்டு படம் மொக்கைன்னு தெரிஞ்சும், படம் அப்படி வந்திருக்கு , இப்படி வந்திருக்குன்னு பொய் சொல்லி, பொய் சொல்லி build -up கொடுத்து 150 ரூ டிக்கெட் ஏய் 1500 ரூ ஏத்து வீங்க...ஒரு மொக்க படத்தை காமிச்சு 100, 200, 300 கோடி னு வசூல் எடுப்பீங்க , ஆனா படம் பாத்திட்டு காசு தண்டம் ஆன கோவத்துல விமரிசனம் போட்ட கோவம் வருதோ...? ஏன் விஜய் மில்டன் சார் தமிழ் சினிமாவுல , அஜித், ரஜினி மட்டும், தான் உங்களுக்கு ஹீரோ வா? கொஞ்சம் நாளைக்கு முன்னாடி, சிங்கம் 3, பைரவ, தனுஷ், கார்த்திக், படமெல்லாம் கழுவி ஊதினப்போ நீங்க எங்க சார் போயிருந்தீங்க...சினிமா குடுமபத்துல நாங்கெல்லாம் ஒரே குடும்பம் னுக்கு பேட்டி குடுக்கிறீங்க ஆனா, விஸ்வரூபம், கத்தி, தலைவா , படத்துக்கு எல்லாம் பிரச்னை வந்தப்ப நீங்க எங்க சார் போயிருந்தீங்க...ஹாலிவுட் லெவல் ல உங்கள யார் ட்ரை பண்ண சொன்னது, ஏற்கனவே அதை எல்லாம் தாண்டியாச்சு. பாகுபலி போய் பாருங்க...120 ரூ டிக்கெட் 1200ரூ கு ஒர்த் ஆனா விவேகம் 10 பைசாவுக்கு கூட இல்ல...இதுல அந்த அப்படத்துக்கு சப்ப கட்டு காட்டுறீங்க...நாங்க விமரிசனம் பண்ண கூடாதுன்னா டிக்கெட் காச திருப்பி கொடுங்கடா பாப்போம்...பணம் போட்ட தயாரிப்பாளருக்கு அந்த படம் எப்படியோ, அதே உரிமை காசு கொடுத்து படம் பாக்க வந்த வானுக்கும் உண்டு. நாங்க அப்படிதான் review பண்ணுவோம் . ஒழுங்கா படம் எடுங்க...இல்லையா மூடிட்டு கிளம்புங்க....
Rate this:
Raman - Chennai,இந்தியா
27 ஆக, 2017 - 10:49 Report Abuse
Raman Hats off to Siva & team and Ajith No one can deny that they have taken the tamil cinema to the next level.
Rate this:
Authentic Stag - Bangalore,இந்தியா
27 ஆக, 2017 - 10:41 Report Abuse
Authentic Stag இப்பொழுது எல்லாம் தமிழன் 28 % GST பற்றி கவலை படாமல் கோடிகளை இந்த கோமாளிகளிடம் கொடுத்துவிட்டு "கோமாளி தொப்பி" பற்றி பேசும் கமல் போல சந்தர்பவாதிகளின் டீவீட்டுக்களுக்கு "லைக்" போட்டு கொண்டு இருப்பான். உருப்படாத ஊரு.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Abhiyum Anuvum
  • அபியும் அனுவும்
  • நடிகர் : டொவினோ தாமஸ்
  • நடிகை : பியா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிஆர் விஜயலட்சுமி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in