'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி நடிக்கும் 2.ஓ படம் 400 கோடியில் தயாராகி வருகிறது. ஆனால் வெறும் 23 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ரஜினி படம் அன்புள்ள ரஜினிகாந்த். 1984ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை ரஜினியின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கினார். அம்பிகா ஹீரோயின், இளையராஜா இசை.
ஆசிரமத்தில் வளரும் ஒரு குழந்தையின் மன மாற்றத்துக்கு நடிகரான ரஜினிகாந்த் எந்த அளவிற்கு உதவிகரமாக இருக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்த குழந்தையாக நடித்தவர் மீனா. இதே மீனாதான் பிற்காலத்தில் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பு உண்டு. ரஜினி வீட்டில் படமாக்கப்பட்ட ஒரே படம் இதுதான். குழந்தை மீனா ரஜினி வீட்டுக்கு ஒருமுறை விருந்துக்கு வருவார். அவருக்கு ரஜினி மனைவி லதா சுவையாக சமைத்து பாரிமாறுவது மாதிரியான காட்சி அது. லதாவின் உருவம் தெரியாது. அவரது கைகள் மட்டுமே காட்டப்படும்.
நண்பன் நட்ராஜிற்கா இந்தப் படத்திற்கு ரஜினி சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. 10 நாள் கால்ஷீட் கொடுத்து 6 நாளில் நடித்துக் கொடுத்தார். 23 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட படம் 100 நாள் ஓடியது. வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையிட்ட தியேட்டர்காரர்களும் நல்ல லாபம் பெற்றனர்.