இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரைப்படங்களின் யு-டியூப் சாதனைகளில் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' பட டீசரின் சாதனைதான் முதன் முறையாக பல சாதனைகளை நிகழ்த்தியது. அதன் பிறகுதான் மற்ற டீசர்கள் அதன் சாதனையை முறியடிக்க முயன்று கொண்டிருக்கின்றன. இருந்தாலும் இன்னும் 'கபாலி' டீசரின் மொத்த பார்வைகள் சாதனையான 3 கோடியே 42 லட்சம் எண்ணிக்கையை இதுவரை வேறு எந்த டீசரும் முறியடிக்கவில்லை.
'கபாலி' டீசர் 10 மணி நேரத்திற்குள்ளாகவே 20 லட்சம் பார்வைகளைத் தாண்டியிருந்தது. ஆனால், '2.0' மேக்கிக் வீடியோ அதே கால அளவை எடுத்துக் கொண்டது. கபாலி டீசரை விட குறைந்த மணி நேரங்களில் 2.0 மேக்கிங் சாதனையை முறிடியக்கும் என்று எதிர்பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாகவே அமைந்தது.
'விவேகம்' டீசர் 12 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து 12 மணி நேரத்திற்குள் 2 லட்சம் லைக்களையும் பெற்றிருந்தது. ஆனால், '2.0' மேக்கிங் வீடியோ 12 மணி நேரத்திற்குள் 1 லட்சம் லைக்குகளைக் தான் தொட்டது.
டுவிட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார் ஆகியோர் இந்த மேக்கிங் வீடியோவை ஷேர் செய்தும் அதிக பார்வைகள் கிடைக்காதது ஆச்சரியமாகவே உள்ளது.
மேலும், 'பாகுபலி 2' படத்தின் யு டீயூப் சாதனைகளை 2.0 மேக்கிங் வீடியோ முறியடித்துவிடக் கூடாது என்பதற்காக தெலுங்கு ரசிகர்களும் கமெண்ட்டுகளில் தாறுமாறாக பதிவிட்டு வருகிறார்கள்.
'விவேகம்' படம் வெளியான பரபரப்பில் '2.0' மேக்கிங் வீடியோவை வெளியிட்டது தவறு. அந்தப் படத்தின் வசூல் என்ன, ரிசல்ட் என்ன என ரசிகர்கள் பலரும் தேடிக் கொண்டிருக்கையில் '2.0' மேக்கிங் வீடியோ இன்னும் பலரது கவனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. 'விவேகம்' பீவர் அடங்கிய பிறகு இந்த வீடியோவை வெளியிட்டிருந்தால் பல சாதனைகளைப் புரிந்திருக்கலாம். இந்த விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம் தவறு செய்துவிட்டது என பலரும் கருதுகிறார்கள்.