சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் - ரஜினி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 2.O. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில், ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
2.O. படத்தின் சில காட்சிகள் வெளியாக இருப்பதாக ஷங்கர் டுவிட்டரில் தெரிவித்ததிலிருந்தே ரஜினி ரசிகர்கள் மத்தியில் 2.O. தொடர்பான பீவர் தொற்றிக்கொண்டது. அதன்படி சரியாக 6 மணிக்கு 2.O. படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது.
1.47 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் 2.O. படத்திற்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டுகள், கிராபிக்ஸ் பயன்பாடுகள், கிரீன் மேட் ஸ்டுடியோக்களில் படமாக்கப்பட்ட காட்சிகள், பிரமாண்ட மைதானத்தில் அசத்தல் ஸ்டன்ட் காட்சிகள், கார்கள், பீரங்கிகள் வெடிக்கும் காட்சிகள், ஏராளமான ரோபோக்களின் மாதிரிகள், ரஜினி, அக்ஷ்ய், எமியின் நடிப்பு... என மிரட்டியிருக்கிறார்கள்.
மேக்கிங் வீடியோவை பார்க்கும்போதே 2.O படத்திற்காக எந்தளவுக்கு மெனகெட்டு இருக்கிறார்கள் என்பதை உணர முடிவதுடன் படத்தை பார்க்க ஆர்வத்தையும் தூண்டியுள்ளனர்.