ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், வேலைக்காரன்.... என நயன்தாரா நடிப்பில் தமிழில் பல படங்கள் உருவாகி வருவதோடு அடுத்தடுத்து ரிலீஸ்க்கு வண்டி கட்டி நிற்கின்றன. இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது இன்னுமொரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். படத்திற்கு "கோலமாவு கோகிலா" என்று பெயர் வைத்திருக்கிறார்கள், இதை சுருக்கி "கோகோ" என தலைப்பாக்கி உள்ளனர். அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.
பிளாக் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாராவுடன் யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய வீடியோ போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.