ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த வருடம் படு பிசியாக படங்களில் நடித்து வருகிறார். எந்த அளவுக்கு என்றால் தனது காதல் மனைவி நஸ்ரியாவுடன் இந்த வருடம் தனது திருமண நாளை கொண்டாட முடியாத அளவு டைட் ஷெட்யூலில் இருக்கிறார். இந்த வருடம் தனது திருமண நாளை நஸ்ரியாவுடன் கொண்டாட முடிவு செய்திருந்தார் பஹத் பாசில். ஆனால் அதற்கு 'கார்பன்' தடைபோட்டுவிட்டது.
'கார்பன்' என்பது பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் பெயர். இந்தப்படத்தை டைரக்டர் வேணு இயக்குகிறார். மம்முட்டி நடிப்பில் அதிரவைத்த 'முன்னறியிப்பு' படத்தை இயக்கியவர் தான் இந்த வேணு. பஹத் பாசிலின் திருமண நாளன்று 'கார்பன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியதால், பகலில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பஹத் பாசில், மாலையில் தான் மனைவி நஸ்ரியாவுடன் திருமண தினத்தை கொண்டாடினாராம்.