பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தவர் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். அதையடுத்து தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள படைவீரன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவரது தந்தையாக பாரதிராஜா நடித்துள்ளார். அமிருதா நாயகியாக நடிக்க, கல்லூரி அகிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்கு இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இயக்குனரான தனா, எழுத்தாளர் ஜெயமோகனிடம் உதவியாளராக சில ஆண்டுகள் இருந்து விட்டு, அதன்பிறகு டைரக்டர் மணிரத்னத்திடத்தில் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அதனால், இந்த படைவீரன் படத்தை மணிரத்னத்திற்கு போட்டுக் காண்பித்து விட்டு அவரது கருத்தினை கேட்டறிந்த பிறகே தணிக்கைக் குழுவிற்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறாராம் தனா.
அவ்வப்போது சில படங்களுக்கு இசையமைத்தும் சரியான ஹிட் கிடைக்காமல் இருந்து வரும் கார்த்திக்ராஜா, இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.