மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் மதுரவீரன். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். புதுமுகம் மீனாட்சி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர சமுத்திரகனி, வேல ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள் சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையாக கொண்டு படம் உருவாகி வருகிறது. மதுரையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
வி-ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் தான் விஜயகாந்த் வெளியிட்டார், இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளார். படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபாரமாகியுள்ளது படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.