ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா ஆரவை தீவிரமாக காதலித்தார். ஆனால், ஆரவ் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மன அழுத்தம் காரணமாக ஓவியா வெளியேறினார். நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் காதலிப்பார்களா, அல்லது பிரிந்து விடுவார்களா என்று தெரியாது. ஆனால் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்தவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள்.
ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியல் சில ஆண்டுகளுக்கு முன்பு கலந்து கொண்டவர்கள் அஷ்மித் படேலும், மஹெல் சாகலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது முதலில் கடுமையாக சண்டை போட்டு விட்டு பின்னர் நிகழ்ச்சி முடியும் முன்பே வீட்டுக்குள்ளேயே காதலிக்கவும் தொடங்கினர். ஓவியா, ஆரவ் காதல் போன்று இதுவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இதுவரை காதலர்களாக இருந்தவர்கள், இப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்க இருக்கிறது.