Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் ஜென்டில்மேன் உண்மையானவராக இருக்கனும் : ஜாக்குலின் பெர்னாண்டஸ்

24 ஆக, 2017 - 18:27 IST
எழுத்தின் அளவு:
My-Gentleman-should-be-Real-Person---Jacqueline-Fernandez

அமிதாப் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக் நடித்த அலாதின் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். தற்போது பிஸியாக நடிகையா வலம் வரும் ஜாக்குலின், நடிப்பில் வெள்ளியன்று(ஆகஸ்ட் 24) "ஏ ஜென்டில்மேன்" படம் ரிலீஸாக உள்ளது. இப்படம் பற்றி நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...

ஜென்டில்மேன் படத்தில் நடிக்க என்ன காரணம்?

நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்று இப்படத்தின் இயக்குநர்களான ராஜ் - டிகே. இருவரும் ரசனையான இயக்குநர்கள். இவர்கள் இயக்கிய கோ கோவா கான் போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்தது படத்தின் கதை எனக்கும் மிகவும் பிடித்தது. என் நிஜ வாழ்க்கையோடு இப்படத்தின் கேரக்டர் ஒத்துப்போனதால் நடிக்க சம்மதம் சொன்னேன்.

படத்தில் உங்க ரோல் பற்றி சொல்லுங்க?
காவ்யா என்ற ரோலில் நடிக்கிறேன். எப்போதும் கலகலப்பாக இருக்க கூடியவர். தன் வாழ்க்கையில் எந்த ஒரு சாகசமும் இல்லை என்று ஏங்குபவர். தனக்கு வரப்போகும் பாய்பிரண்டு, நேர்மையாக, அழகானவராக, தைரியமானவராக, சாகசங்கள் செய்பவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர் மாதிரியான வேடத்தில் நடித்துள்ளேன்.

ஆக்ஷ்ன் காட்சிகளில் நடித்தது பற்றி?
எனக்கு ஆக்ஷ்ன் படங்கள் பண்ண பிடிக்கும். இப்படத்தில் அப்படி நடிக்கும்போது மிகவும் ஆவலாய் இருந்தது. படத்தில் எனக்கு நிறைய ஆக்ஷ்ன் காட்சிகள் கிடையாது. இருந்தாலும் ஏதோ பண்ணியிருக்கிறேன். அகிராவில் சோனாக்ஷி சின்ஹா நடித்தது போன்று ஒரு முழு நீள ஆக்ஷ்ன் படத்தில் நடிக்க விரும்புகிறேன்.

உங்களின் அழகான புன்னகை பற்றி?
நிறையபேர் எனது புன்னகை அழகாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். முதன்முறையாக நான் சல்மானை சந்தித்த போது, எனது புன்னகை அழகாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதோடு எனது பெயரையும் முஸ்கான் என மாற்றிக்கொள்ளும்படி சொன்னார். என் புன்னகையில் போலித்தனம் இருக்காது. ஆள் மனதிலிருந்து சிரிக்கிறேன், என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது.

உங்களின் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
நிறைய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. எனக்கு வரப்போகும் ஜென்டில்மேன் உண்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால் சினிமாவில் இருப்பவர்கள் போலியானவர்கள், பொய் பேசுபவர்களாக உள்ளனர், மற்றபடி வேறு எதுவும் கிடையாது. அப்புறம், இன்னொரு விஷயம் நல்ல சமைக்க தெரிந்தவராகவும் அந்த ஜென்டில்மேன் இருக்க வேண்டும் என்று புன்னகைக்கிறார் ஜாக்குலின்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in